திண்டிவனம் அருகே துணிகரம் மோட்டார்சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனம் அருகே துணிகரம்    மோட்டார்சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு    மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

திண்டிவனம் அருகே மோட்டார்சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் 13 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள கீழ் மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 47). கணவன்-மனைவி இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வெள்ளிமேடுபேட்டை கூட்டுரோட்டில் இருந்து கீழ் மாவிலங்கை கிராமம் செல்லும் வளைவில் திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளுடன் சிவக்குமார் நின்றார். அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சிவக்குமார் கண்முன்பே விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 13 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story