ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

இலத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையநல்லூர்:

இலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இலத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் மொத்தம் 50 கிலோ வீதம் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், இவர்கள் கடையநல்லூர் அருகே வேலாயுதபுரம் ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (வயது 42) என்பவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செந்தில்குமார் மற்றும் லோடு ஆட்டோ டிரைவர் ஊர்மேலழகியான் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணி (35) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி, லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மணி, செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story