மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளையபெருமாள், குற்றப்பிரிவு தனிப்படை சிறப்பு உதவியாளர் சிவகுமார் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஆலத்தூர் தாலுகா மேட்டுத்தெரு வரகுபாடியை சேர்ந்த அஜித் (23), சாத்தனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (20) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் செல்வராஜுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story