வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
அருப்புக்கோட்டை,
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை ெரயில்வே புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் எம்.டி.ஆர். நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 62) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சித்திரக்கனி மனைவி பூசனம் ( 65). இவரும் இவரது மகன் முருகன் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பூசனம் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இ்ந்த விபத்து குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.