புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே குப்பாச்சிப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், தனது மளிகை கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி கருப்பன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் இருந்த ரூ.6 ஆயிரத்து 390 மதிப்புள்ள 7 கிலோ 650 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் குளித்தலை அருகே உள்ள பாப்பக்காபட்டி பகுதியில் தனது பெட்டி கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த சித்ரா (40) என்பவரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடையில் இருந்த ரூ.1, 080 மதிப்புள்ள 720 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story