2 வாலிபர்கள் பலி


2 வாலிபர்கள் பலி
x

2 வாலிபர்கள் பலி

தஞ்சாவூர்

தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

வாலிபர் பலி

தஞ்சை பட்டுக்கோட்டை புறவழிச்சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி (வயது22). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வெளியே சென்றார். சிறிது தூரம் சென்றபோது அந்த பகுதியில் இருந்த பாலத்தில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதனால், பலத்த காயம் அடைந்த உதயநிதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாகையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் சந்தோசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால், பலத்த காயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த இரு விபத்துக்கள் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story