ரெயிலில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ரெயிலில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ரெயிலில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் கடந்த ஒரு வாரமாக சங்கமித்ரா, லால் பாக், சேஷாத்ரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் ரெயில்கள், சிக்னலுக்காக மெதுவாக செல்லும்போது, முட்புதர் மறைவில் சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைத்திருக்கும் அரிசி மூட்டைகளை ரெயிலில் ஏற்றி கடத்துவதை கண்காணித்தனர்.

அப்போது வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே 1½ டன் ரேஷன் அரிசி, ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி என மொத்தம் 2½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசனிடம் ஒப்படைத்தனர்.


Next Story