வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் முதல்-மந்திரி பட்னாவிஸ் கருத்து

வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் முதல்-மந்திரி பட்னாவிஸ் கருத்து
x
தினத்தந்தி 2 Jan 2017 9:00 PM GMT (Updated: 2 Jan 2017 9:00 PM GMT)

வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

வரவேற்பு

வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து இருக்கும் அறிவிப்பு குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:-

வங்கிகளின் வட்டிவிகிதம் குறைக்கப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். இது பிரதமர் நரேந்திர மோடியின் மற்றொரு நேர்மறை தாக்கம் தரக்கூடிய திட்டம். இது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வழியில் உந்துசக்தியாக திகழும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இதனால் வீட்டுவசதி, வாகனங்கள் போன்ற நுகர்வோர் சாதனங்கள் துறையில் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கமுடியும். பெரும் அளவில் வேலைவாய்ப்பும் உருவாகும்.

வேலைவாய்ப்புகள் பெருகும்

குறைந்த வட்டிவிகிதம் காரணமாக தொழில் முதலீடு அதிகரிக்கும். தொழில் முதலீடு அதிகரிப்பதால் வேலைவாய்ப்புகள் பெருகும். எனவே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story