தனது 65-வது பிறந்த நாளையொட்டி அண்ணா, பெரியார் நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை


தனது 65-வது பிறந்த நாளையொட்டி அண்ணா, பெரியார் நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 1 March 2017 8:28 AM IST (Updated: 1 March 2017 8:27 AM IST)
t-max-icont-min-icon

தனது 65-வது பிறந்த நாளையொட்டி அண்ணா, பெரியார் நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளையொட்டி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்த  மு.க.ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச்சென்றார். காலை  8 மணியளவில் பெரியார் நினைவிடம் வந்த அவர், அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
இதன் பிறகு, கோபாலபுரம் இல்லம் வரும் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும், தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசி பெறுகிறார். அங்கிருந்து, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு அவர் வருகிறார்.அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார். தொண்டர்கள் தனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக புத்தகங்கள் அளித்தால் மேலும் தனது அறிவை விசாலப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.எனவே, மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு புத்தகங்களை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், அவரை சந்தித்து வாழ்த்தவரும் தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story