65-வது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து


65-வது பிறந்தநாள் கொண்டாடும்  ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து
x
தினத்தந்தி 1 March 2017 6:02 AM GMT (Updated: 1 March 2017 6:02 AM GMT)

65-வது பிறந்தநாள் கொண்டாடும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.


சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டா லினுக்கு இன்று 65-வது பிறந்தநாள். இதையொட்டி அவர் இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு  சென்று அஞ்சலி செலுத்தி னார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் மு.க.ஸ்டா லின் ‘கேக்’ வெட்டினார்.

அதன் பிறகு கீழ்ப்பாக் கத்தில் உள்ள பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.பின்னர் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை மற்றும் பேரக் குழந்தைகளுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். அப்போது இயக்குனர் அமிர்தம், மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. மகளிரணியினருடன் சென்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். செல்வியும் வாழ்த்து கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

Next Story