பிளஸ் 2 தேர்வு தொடங்கியது பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்


பிளஸ் 2 தேர்வு தொடங்கியது பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 2 March 2017 10:23 AM IST (Updated: 2 March 2017 10:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச் சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்



சென்னை,

தமிழகம் மற்றும் புதுச் சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

9 லட்சத்து 33 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு 31-ந் தேதி வரை நடக்கும். இத்தேர்வில் மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபடாமல் கண்காணிக்க 8 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுதுகின்றனர். இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைப்பெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு அறைக்கு செல்லும் முன்பாக மாணவ-மாணவிகள் தங்கள் ஆசிரியர், ஆசிரியைகளிடம் வாழ்த்து பெற்று சென்றனர்.

தேர்வு பணியில் 46,685 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு மாணவர்கள் செல்போன் எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
துண்டு தாள் வைத்திருந்த்தல் துண்டுதாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.

மேலும் ஒழுங்கீன செயல் களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமானால் அந்த பள்ளியின் தேர்வு மையம் ரத்து செய்யப்படுவ தோடு அங்கீகாரமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

தேர்வு மையத்தை பார்வையிட்டேன். போன ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 65 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ் உளபட  10 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கபட்டு உள்ளது.இந்த் அரசை கலவித்துறையில் பல்வேறு மாற்றங்ளை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story