எனக்கு மந்திரி பதவி கிடைக்க தினகரன் காரணம் அல்ல ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
எனக்கு மந்திரி பதவியோ, முதல் மந்திரி பதவியோ கிடைக்க தினகரன் காரணம் அல்ல என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,
தனியார் டிவிக்கு ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-
நான் 1980 முதலே கட்சியில் பொறுப்பில் இருந்து வருகிறேன். ஜெய லலிதா தான் என்னை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். அப்போது நீங்கள் வெற்றி பெற்றால் அமைச்சர் ஆக்கு கிறேன் என்றார். அவர் கொடுத்த பணியை சிறப் பாக செய்தேன். அதனால் என்னை முதல்-அமைச்சர் ஆக்கினார். அவருக்கு விசு வாசமாக இருந் திருக்கா விட்டால் என்னை முதல்- அமைச்சராக்கி இருக்க மாட்டார்.
ஆனால் டி.டி.வி. தினகரனை ஜெயலலிதா எம்.பி. தேர்தலில் நிற்க வைத்து எம்.பி. ஆக்கினார். அடுத்து அவர் தோற்றதால் மேல்&சபை எம்.பி. ஆக்கினார். அதன்பிறகு 2007-ல் இருந்து ஏன் அவரை ஒதுக்கி வைத்தார்.
பொறுப்புகளை எல்லாம் ஏன் பறித்தார். அந்த குடும் பத்தையே வெளி யேற்றினார். அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர். தங் களுக்கு எதிராக சதி நடந்து இருப்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் என்று கூறவில்லையா?
தி.மு.க.வை எதிர்ப்பது என்ற அடிப்படையில் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க வை தொடங்கி னார். அவர் வழியில் ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார்.
ஸ்டாலினுடன் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.தி.மு.கவுக்கு எனக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லை. எந்த அடிப்படையில் அதை சொல் கிறார் என்று தெரிய வில்லை.
இதே போல் பா.ஜனதாவுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் என்னை இயக்குவதாகவும் கூறுவதில் உண்மையில்லை. எச்.ராஜா என்னை சந்தித்த போது சில வேண்டுகோள்கள் விடுத்தார். அதை ஏற்க முடியாதது என்பதால் நிராகதித்து விட்டேன். மதசார்பற்ற தன்மையில் இருந்து அ.தி.மு.க.வை ஜெயலலிதா எவ்வாறு வழிநடத்தினாரோ அதே வழியில் தொடர்ந்து செயல்படுவோம்.
கட்சி பெயர், சின்னம் முடக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் இல்லை. 1972-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட போது அவர் மட்டுமே எம்.எல்.ஏ வாக இருந்தார். ஆனால் தொண்டர்களும், மக்களும் எம்.ஜி.ஆர் பக்கம் இருந்தனர்.
இப்போது அது போன்ற நிலை எங்களுக்கு இருக்கிறது. தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இந்த தேர்தலுக்குப்பின் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும். மதுசூதனன் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்காக இந்த ஆட்சியிடம் தான் வரவேண்டும், யாரிடம் போய் கோரிக்கை மனு கொடுப்பார் என்று தினகரன் கூறியிருக்கிறார். அதிகார போதையில் அவர் அதை சொல்லி இருக்கிறார்.
122 எம்.எல்.ஏ.க்களை வைத்து நடைபெறும் இந்த அரசாங்கம் 234 தொகுதிகளுக்கும் சேர்த்து தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும். நான் ஜல்லிக்கட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தேன். கடைசி நேரத்தில் அந்த போராட்டத்தில் தடியடி நடந்தது தேவையற்றது. அவசர சட்டம் பிறப்பிக் கப்பட்டதும் போராட்டக்காரர்கள் வெளியேறி விட்டார்கள். ஆனால் 200 பேர் மட்டும் மறுத்தனர். அவர்கள் ஜல்லிக்கட்ட ஆதரவாளர்கள் அல்ல. போராட்டம் திசை மாறி சென்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின் மிகப்பெரிய சக்தி உருவாகி இருக்கிறது.இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story