தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி
x
தினத்தந்தி 2 April 2017 8:03 PM IST (Updated: 2 April 2017 8:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார்.

சென்னை,

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னையிலுள்ள அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 வரை ஒட்டுப்பதிவு நடைபெற்றது. தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. விஷால் அணி, தாணு அணி, எஸ்.ஏ சந்திர சேகரன் அணி உள்ளட்ட 3 அணிகள் போட்டியிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டது. ஒட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவில் விஷால் 362, கேயார் 173, ராதாகிருஷ்ணன் 262 ஒட்டுக்கள் பெற்றுள்ளனர். விஷால் 143 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story