விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 April 2017 11:55 AM IST (Updated: 4 April 2017 11:55 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


சென்னை:

தமிழகத்தில் போதிய பருவமழை இன்றியும், அண்டை மாநிலங்களில் இருந்து நீர்வரத்து இன்மையாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் கடன் ரத்து, வறட்சி நிவாரணம், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய  உத்தரவிட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகை, பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆணை பிறபித்து உள்ளனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

தீர்ப்பு குறித்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அய்யாகண்ணு கூறியதாவது:-

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்:.மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.

Next Story