தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது தீயணைப்புத்துறை துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தகவல்


தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது தீயணைப்புத்துறை துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தகவல்
x
தினத்தந்தி 31 May 2017 6:47 PM GMT (Updated: 31 May 2017 6:47 PM GMT)

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புகை மூட்டமும் கட்டுக்குள் உள்ளது. நெருப்பு கனலை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் தீயால் ஏற்பட்ட நெருப்பு கனலை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கட்டடத்தின் நான்கு புறங்களிலும் நீரை பீய்ச்சி அடிக்கும் பணி நடந்து வருகிறது. விமான நிலையத்தில் இருந்து ராட்சத நுரைக்கலவை எந்திரம் வரவழைக்கப்பட்டது.  கட்டடம் மீது நுரைக்கலவை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story