பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 15 Jun 2017 11:15 AM GMT (Updated: 15 Jun 2017 11:14 AM GMT)

சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்

பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை


தமிழக சட்டபேரவையில் இன்று பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும்
* 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்
* மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் - எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்
* சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது
* மலைப்பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்
* பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும்
* ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்
* அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்
* பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் மற்றும் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்
* பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர் குழு கருத்து கேட்டு ஒரு வாரத்தில் பேரவையில் தெரிவிக்கப்படும்
* நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்
* மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பம், கலைகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பி வைக்கப்படுவர்
* அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

Next Story