இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் அமைச்சர் சீனிவாசன் பேட்டி


இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் அமைச்சர் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2017 4:01 PM IST (Updated: 17 Jun 2017 4:00 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் அதற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சீனிவாசன் கூறி உள்ளார்.

சென்னை

அமைச்சர் திண்டுக்கல் சீனிவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும்; அதற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.சின்னம் முதலமைச்சர் அணிக்கே கிடைக்கும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சனைகளை எழுப்புகின்றன.மலைவாழ் மக்கள் செம்மரம் வெட்ட செல்வதை தடுக்க சந்தனமரம் வளர்க்கத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பேரவையில் அமளியில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முதல்வரே முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story