முதல்வரை 420 என வசைபாடியது தினகரன் வாய்தவறி கூறியதாகும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


முதல்வரை 420 என வசைபாடியது தினகரன் வாய்தவறி கூறியதாகும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
தினத்தந்தி 12 Aug 2017 5:01 AM GMT (Updated: 12 Aug 2017 5:01 AM GMT)

முதல்வரை 420 என வசைபாடியது தினகரன் வாய்தவறி கூறியதாகும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார்.

சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரன் நியமனம் செல்லாது என தீர்மான நிறைவேற்றபட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய தினகரன்  420 என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு நேற்று டெல்லியில் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘420’ என தினகரன் கூறியது அவருக்கு தான் பொருந்தும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று கோவையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

முதல்வர் குறித்து தினகரன் கூறிய  420 என்ற வார்த்தை வாய்தவறி வந்தது. தினகரன் தான் 420 என முதல்வரை திட்டியது எனக்கு தெரியாது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு  துணை முதல்வர் பதவி  வழங்கப்படும் என்பது பத்திரிகைகளில் வரும் செய்தி தான். அ.தி.மு.கவில் நடப்பது அண்ணன் தம்பி சண்டை தான்    இவ்வாறு அவர் கூறினார்.

Next Story