தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை,
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 90 குழந்தைகள் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
10 முதல் 15 நாட்களில் அனைத்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் அந்த காய்ச்சல் பருவகாலங்களில் வரும் காய்ச்சல் என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்காமல் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story