ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண் கலெக்டர்


ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண் கலெக்டர்
x
தினத்தந்தி 15 Aug 2017 9:49 AM GMT (Updated: 15 Aug 2017 9:49 AM GMT)

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொடியேற்ற கேரள பெண் கலெக்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டின் 71வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கர்ணகாயாமன் உயர்நிலை பள்ளியில் நடைபெறவிருந்த சுதந்திர விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்ற இருந்தார்.

இந்நிலையில், அதை தடுக்கும் வகையில் பாலக்காடு மாவட்ட கலெக்டர் மேரிகுட்டி அப்பள்ளிக்கு மெமோ ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பள்ளியில் நடக்கும் விழாவில் ஒரு அரசியல் தலைவர் தேசிய கொடியை ஏற்றுவது பொருத்தமற்றது.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்லது பள்ளியின் முதல்வர் கொடி ஏற்றலாம். ஆனால் ஒரு அரசியல் தலைவர் அல்ல என மெமோவில் குறிப்பிட்டுள்ளார்.

கலெக்டர் மேரிகுட்டியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள பாஜக, அவர் சிபிஐ (எம்)யின் கிளை செயலாளராக செயல்படுகிறார். அதனால், தான் இதை தடுக்கிறார் என கூறியுள்ளனர்.

எனினும், திட்டமிட்டபடி விழாவில் கலந்துக்கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தேசிய கொடியை பறக்கவிட்டார்.

Next Story