கடலோர காவல் படை ரோந்துப்பணிக்கு 2 புதிய படகுகள்


கடலோர காவல் படை ரோந்துப்பணிக்கு 2 புதிய படகுகள்
x
தினத்தந்தி 17 Aug 2017 4:45 AM IST (Updated: 17 Aug 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

கடலோர பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 36 ரோந்து படகுகளை தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்திய கடலோர காவல் படை ஒப்பந்தம் செய்திருந்தது. அதனடிப்படையில் புதிதாக தயாரிக்கப்பட்ட சார்லி வகை ரோந்து படகுகளான சி–433 மற்றும் சி–434 ஆகிய 2 ரோந்து படகுகள் கடலோர காவல் படையிடம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து படகுகள் மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கடற்கரையை பலப்படுத்துவதற்கான பணியில் ஈடுபடுத்த கடலோர காவல்படை திட்டமிட்டு உள்ளது.

இந்தப்படகுகள் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்களின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிப்பதுடன், மீனவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த ரோந்து படகு, அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதில் 12 கடலோர காவல் படை வீரர்களும், 1 அதிகாரியும் பணியில் இருப்பார்கள். இதனுடைய ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story