அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு இன்று இல்லை என தகவல்


அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு இன்று இல்லை என தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2017 4:57 PM GMT (Updated: 18 Aug 2017 4:57 PM GMT)

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று அறிவிப்பு எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் ஓ.பி.எஸ். அணியினரின் இரு முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் இரு அணிகளும் மீண்டும் தீவிரமாக களம் இறங்கியது. அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிப்பார்கள் என தகவல் வெளியாகின.  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணியினர் தரப்பில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக இரு அணிகள் இணைய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியது.

பன்னீர்செல்வம் அணியினரின் 2 நிபந்தனைகள் 3 நிபந்தனைகளாக உயர்ந்ததால் அதிமுக அணிகள் இணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தெரிவிப்பார் - பி.ஹெச்.பாண்டியன் கூறியிருந்தார்.  

இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு இன்று இல்லை என தெரிகிறது.  திங்கட்கிழமைக்குள் இரு அணிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story