பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம்


பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Sept 2017 12:05 PM IST (Updated: 12 Sept 2017 12:05 PM IST)
t-max-icont-min-icon

பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் முழு விவரம் வருமாறு:- பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுவதும் நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் வர தொடங்கினர்கள். பொதுக்கூழுவிற்கு 95 சதவீதம் உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை  வானகரத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்து உள்ளனர்.

 செயற்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழுவில் 2148 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது .

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்  தீர்மானங்களை வாசித்தார்
 
* இரட்டை இலை சின்னத்தை  மீட்க வேண்டும் என முதல் தீர்மானம் நிறைவேற்றம்.

* அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்ததற்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம்.

* வார்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

* ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

* தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றம் .  யார் யார் என்ன என்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அதில் தொடர்வார்கள். 

* அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* ஜெ. வீட்டை நினைவு இல்லமாக்கும் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும்.

*வழிகாட்டு குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

* ஒருங்கிணைப்பு குழு  தலைவராக ஓ. பன்னீர் செல்வமும், ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்கள்.

* ஒருவரை கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பொதுக்கூழுவில் ஒப்புதல். 

*கட்சி விதியில் சட்டதிருத்தம் கொண்டு வர ஈபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 *கட்சி விதி எண் 19 இல் திருத்தத்தம் செய்ய  ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*துணை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி நியமனம்.

Next Story