உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செப்டம்பர் 15-ல் ஆஜராக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முடிவு


உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செப்டம்பர் 15-ல் ஆஜராக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முடிவு
x
தினத்தந்தி 13 Sep 2017 12:00 PM GMT (Updated: 13 Sep 2017 12:00 PM GMT)

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அரசாணைப்படி, வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அவர்கள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்  ஜாக்டோ-ஜியோ கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. அதில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அரசாணைப்படி, வரும் 15ம் தேதி நேரில் ஆஜராகி  வழக்கினை சட்டப்படி எதிர்கொள்வது எனவும்  கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Next Story