நவோதயா பள்ளி என்ற பெயரில், தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு மீது ஸ்டாலின் தாக்கு


நவோதயா பள்ளி என்ற பெயரில், தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு மீது ஸ்டாலின் தாக்கு
x
தினத்தந்தி 16 Sept 2017 8:53 PM IST (Updated: 16 Sept 2017 8:53 PM IST)
t-max-icont-min-icon

நவோதயா பள்ளி என்ற பெயரில், தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திண்டுக்கல், திமுக முப்பெரும் விழாவில் செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:

நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது. நவோதயா பள்ளி என்ற பெயரில், தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. அதனை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டது. திமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருப்பூரில் கண்டெய்னர்களில் ரூ.500 கோடி பறிமுதல் செய்யப்பட்டதன் நிலை என்ன? பெரும்பான்மை தொடர்பாக நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. வராவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். நாளை முதல் திமுகவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story