டெங்கு ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் விளையாடிய அதிகாரிகள்


டெங்கு ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் விளையாடிய அதிகாரிகள்
x
தினத்தந்தி 16 Oct 2017 6:01 AM GMT (Updated: 16 Oct 2017 6:01 AM GMT)

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைக் கூட்டத்தில், செல்போனில் கவனம் செலுத்திய அதிகாரிகளின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய், காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஆலோசனைக் கூட்டத்தை கவனிக்காமல், சில அதிகாரிகள் செல்போனில் பேசிக்கொண்டும், வீடியோ மற்றும் வாட்ஸ் சப் பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

Next Story