வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை


வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு  தமிழகம், புதுச்சேரியில்  2 நாட்களுக்கு மழை
x
தினத்தந்தி 16 Oct 2017 8:13 AM GMT (Updated: 16 Oct 2017 8:13 AM GMT)

குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டல மாக மாறி வடமேற்கு திசையில் நகரும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாமரை பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story