போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு


போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
x
தினத்தந்தி 17 Oct 2017 12:30 AM IST (Updated: 16 Oct 2017 10:58 PM IST)
t-max-icont-min-icon

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

சென்னை, 

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். மாதவரம் போலீசார் தாடி பாலாஜி மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் தாடி பாலாஜியின் மனைவி நித்யா பரபரப்பு பேட்டி கொடுத்தார். தாடி பாலாஜி தன்னை மிரட்டுவதாகவும், குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில், ‘மனைவி நித்யாவுடன் சேர்ந்துகொண்டு சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரும், மின்சார வாரிய ஊழியர் ஒருவரும் தன்னை மிரட்டுகிறார்கள் என்றும், போலீசார் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றும் தாடி பாலாஜி குறிப்பிட்டு இருந்தார்.



Next Story