அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிப்பு


அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 6:54 AM GMT (Updated: 17 Oct 2017 6:54 AM GMT)

அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தனர்.

சென்னை, 

அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைமைக் கழகம் முன்பு அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கட்சி கொடியையும் ஏற்றிவைத்தனர்.

வழக்கமாக அ.தி.மு.க. ஆண்டு விழா கொண்டாட்டத்தில் தலைமைக் கழகம் முன்பு அதிர்வேட்டுகள், இசைக் கச்சேரிகள், இனிப்பு வினியோகம் என களை கட்டும். ஆனால் இன்று தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டிருந்தாலும் ஜெய லலிதா இல்லாத குறையால் ஆர்ப்பாட்டம் -ஆரவாரம் இல்லாமல் கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, செம்மலை, அமைப்பு சாரா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன், பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், மைத்ரேயன், வைத்திலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story