தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்


தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 19 Oct 2017 1:56 PM IST (Updated: 19 Oct 2017 1:56 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஓ. பன்னீர்செல்வம், அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா, தேனி மாவட்டத்தில் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும்  பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகளும் கவனித்து வருகிறார்கள்.

தேனியில்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு  போடி விலக்கு மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.  இன்று காலை ஓ. பன்னீர்செல்வம்,  மைதானத்தில் முகூர்த்தகால் நட்டு, விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என வழிபாடு நடத்தி, விழா ஏற்பாடுகளைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, மேடை எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதில் துவங்கி பார்க்கிங் வசதி எங்கே செய்யப்பட்டுள்ளது என்பது வரை அனைத்து திட்டங்களையும் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

தேனி மாவட்டத்தில் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவருக்கு புகழை சேர்க்கும் வகையில் நடைபெற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அவருக்கு அனைவரும் புகழ் சேர்ப்பார்கள் என்றார்.

ஏற்கெனவே, தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் ஆதரவு  பொதுக்கூட்டத்துக்கு முகூர்த்தகால் நட்ட அதே மைதானத்தில்தான் தற்போது பன்னீர்செல்வம் முகூர்த்தக்கால் நடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story