சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கசாயத்தை கேட்டுள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர்


சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கசாயத்தை கேட்டுள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 19 Oct 2017 2:46 PM IST (Updated: 19 Oct 2017 2:45 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கசாயத்தை கேட்டுள்ளன என அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை

தஞ்சை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நில வேம்பு கசாயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கசாயத்தை கேட்டுள்ளன.

15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story