நேற்றுபோல் இன்று இருக்காது; இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் - வெதர் மேன்


நேற்றுபோல் இன்று இருக்காது; இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் - வெதர் மேன்
x
தினத்தந்தி 1 Nov 2017 7:25 AM GMT (Updated: 1 Nov 2017 7:25 AM GMT)

நேற்றுபோல் இன்று இருக்காது. இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் என வெதர் மேன் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளார்.


சென்னை

நேற்றுபோல் இன்று இருக்காது. இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனதுபேஸ்புக்கில்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கிவிட்டது. மேகங்கள் மெதுவாக உள்நோக்கி நகர்ந்து வருகின்றன. லேசான மழையாகத் தொடங்கி சில இடங்களில் மிதமான அளவு மழை பெய்யும். ஒருசில வேளைகளில் மட்டும் சற்று கனமழையாக பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம், புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, சென்னையின் பிற பகுதிகளில் இன்று மிதமான அளவு மழை இருக்கும். நிறைய அடுக்கடுக்காக மழை மேகங்கள் தொடர்ந்து கரையில் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே, நேற்றுபோல் இன்று இருக்காது. இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.

Next Story