மக்கள் பிரச்சனை குறித்து பேசினால் தேச துரோக வழக்கு போடும் அரசாக உள்ளது - ஸ்டாலின்


மக்கள் பிரச்சனை குறித்து பேசினால் தேச துரோக வழக்கு போடும் அரசாக உள்ளது - ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 Nov 2017 2:40 PM GMT (Updated: 1 Nov 2017 2:48 PM GMT)

மக்கள் பிரச்சனை குறித்து பேசினால் தேச துரோக வழக்கு போடும் அரசாக உள்ளது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்களை பற்றிதான் சிந்தித்து வருகிறது.  டெங்கு குறித்து நான் கூறியது பொய் என்றால், வழக்கு தொடரலாம்; ஆதாரத்துடன்தான் நான் குற்றம்சாட்டுகிறேன். மக்கள் பிரச்சனை குறித்து பேசினால் தேச துரோக வழக்கு போடும் அரசாக உள்ளது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக. தற்போது ஆளும் அரசை கவிழ்க்கவில்லை என மக்கள் மீது திமுகவினர் கோபத்தில் உள்ளனர். எம்.ஜி.ஆர் விழா என்ற பெயரில் அவரது புகழை பேசாமல் திமுகவை பற்றி பேசுவது ஊழலை மறைக்கவே.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான்.அவரின் திறமைகளை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story