சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2017 4:29 PM GMT (Updated: 2 Nov 2017 4:29 PM GMT)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.  தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது.  தொடர்ந்து கனமழை பெய்ததால் இரவு சென்னையின் பிரதான சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. 

இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  நாகை, திருவாரூர், காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story