ஓ. பன்னீர் செல்வம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது


ஓ. பன்னீர் செல்வம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 3 Nov 2017 5:19 AM GMT (Updated: 3 Nov 2017 5:19 AM GMT)

துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சில இடங்களில் வெள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்த மழை வெள்ளத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடும் தப்பவில்லை. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் தரைதளத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து மின்பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story