டாக்டர் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் நீதிபதி ஆறுமுகசாமியிடம் ‘டிராபிக்’ ராமசாமி மனு
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி, நீதிபதி ஆறுமுகசாமியிடம் நேற்று மனு கொடுத்தார்.
சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி, நீதிபதி ஆறுமுகசாமியிடம் நேற்று மனு கொடுத்தார். பின்னர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, அவருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நான் முதலாவதாக ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா பூரண நலம் பெற்றுவிட்டார் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார். எனவே அவரையும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் தெரிவித்தேன். அதற்கு நீதிபதி ஆறுமுகசாமி, இந்த விசாரணையில் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story