ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை தேர்வு செய்ய ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை தேர்வு செய்ய  ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
x
தினத்தந்தி 25 Nov 2017 11:42 AM IST (Updated: 25 Nov 2017 12:11 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை, 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே காங்கிரஸ்  கட்சியின் ஆதரவு தி.மு.க.வுக்குதான் என திருநாவுக்கரசர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூன்யன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிக்கின்றன. இதுவரை 6 கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.  

இந்த நிலையில்  ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பான் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.,மு.க 
செயல் 
தலைவர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லாமுத்துசோழன்,மருதுகணேஷ், அண்ணா அறிவாலயம் வருகை தந்து உள்ளனர். கூட்டத்தில் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட இருவரும் வாய்ப்பு கேட்டு வந்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

Next Story