டி.டி.வி.தினகரனுக்கு எந்த சின்னம் கிடைக்கும்?


டி.டி.வி.தினகரனுக்கு எந்த சின்னம் கிடைக்கும்?
x
தினத்தந்தி 1 Dec 2017 10:45 PM GMT (Updated: 1 Dec 2017 7:40 PM GMT)

தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் டி.டி.வி.தினகரனுக்கு எந்த சின்னம் கிடைக்கும்? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். ஆனால் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் அளித்தவர்கள் பலரும் தொப்பி சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரே சின்னத்தை பலரும் கேட்டால் குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒதுக்கப்படும். எனவே சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ள டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் தனது வேட்புமனுவில் தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகிய 3 சின்னங்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதில் டி.டி.வி.தினகரனுக்கு என்ன சின்னம் கிடைக்கப் போகிறது? என்பது வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தவுடன் தெரிய வரும்.


Next Story