ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி:தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு


ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி:தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2017 2:42 PM GMT (Updated: 2 Dec 2017 2:42 PM GMT)

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.   

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என தமிழக  பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Next Story