ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நடிகர் விஷால் போட்டியிருவது குறித்து முக ஸ்டாலின் சொன்னது என்ன?


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நடிகர் விஷால் போட்டியிருவது குறித்து முக ஸ்டாலின் சொன்னது என்ன?
x
தினத்தந்தி 3 Dec 2017 10:34 AM GMT (Updated: 3 Dec 2017 10:34 AM GMT)

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது தொடர்பாக முக ஸ்டாலின் தன்னுடைய கருத்தை தெரிவித்து உள்ளார்.

சென்னை, 
 
ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறிஉள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பல்வேறு தரப்பில் வெவ்வேறு பதில்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பட்டதற்கு அவர் பதிலளிக்கையில்,  வாக்குரிமை பெற்றிருக்க கூடிய யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்பதற்கு உரிமை உண்டு என்பது தான் எனது கருத்து என்றார். 


Next Story