ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம் வெற்றிவேல் மீது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் போலீசில் புகார்


ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம் வெற்றிவேல் மீது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் போலீசில் புகார்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:07 PM (Updated: 20 Dec 2017 4:07 PM)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் வெற்றிவேல் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சென்னை,

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளது. விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் விதமாக வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் பன்னீர்செல்வம் புகார் தெரிவித்து உள்ளார். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி, மோதல் ஏற்பட வெற்றிவேல் வழிவகை செய்துள்ளார் என விசாரணை ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் 

ஆணையமும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. 

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பேசுகையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் தான் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என கூறுகிறோம். சைபர் க்ரைம் போலீஸ் மூலம் சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என கூறியிருந்தார். 

Next Story