தமிழக ராணுவ வீரர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்


தமிழக ராணுவ வீரர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 23 Dec 2017 5:30 PM GMT (Updated: 23 Dec 2017 5:30 PM GMT)

தமிழக ராணுவ வீரர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கரூர் மாவட்டம், கொசூர் அடுத்துள்ள நதிபடியை சேர்ந்த ராணுவ வீரர் என்.மூர்த்தி, ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பனிச்சரிவில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய திருநாட்டின் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் உயிரிழந்துள்ள ராணுவ வீரர் மூர்த்தியின் தியாக வாழ்வு, நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தமிழக ராணுவ வீரர்களின் அரிய பங்களிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story