கவர்னர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
ஏசு கிறிஸ்து பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடும் சகோதர–சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:–
கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக களிப்பு மற்றும் ஆனந்தத்தின் திருவிழா ஆகும். அத்தகைய மகிழ்ச்சிகரமான நாளில், ஏசு கிறிஸ்து பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடும் சகோதர–சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏசு கிறிஸ்து அன்பு, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக வாழ்ந்தவர். எனவே, அவர் பிறந்த இந்த நன்னாளில் மக்களிடையே அமைதி, மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவை பெருகட்டும் என உளமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story