மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து


மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Dec 2017 12:45 AM IST (Updated: 24 Dec 2017 10:49 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் 25–ம் தேதி (இன்று) எழுச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏ

சென்னை, 

தி.மு.க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

டிசம்பர் 25–ம் தேதி (இன்று) எழுச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து கிறிஸ்துமஸ் திருநாளை மனிதநேயத் திருவிழாவாக ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழுக்கும், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் கிறிஸ்தவ சமுதாயம் நீண்ட நெடுங்காலமாக ஆற்றிவரும் அரும்பணிகளை நினைவுகூர்ந்து, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரங்களில் எல்லாம் கிறிஸ்தவ சமுதாய மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதற்குச் செயல்வடிவமும் கொடுத்து நிறைவேற்றியவர் என்பதை இந்த நல்ல நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மகிழ்ச்சிக்குரிய பெருவிழாவாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து அவர்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story