நல்லகண்ணு உடனான சந்திப்பு கட்சிக்கு அப்பாற்பட்டது - நடிகர் கமல்


நல்லகண்ணு உடனான சந்திப்பு கட்சிக்கு அப்பாற்பட்டது - நடிகர் கமல்
x
தினத்தந்தி 17 Feb 2018 9:57 AM GMT (Updated: 17 Feb 2018 10:18 AM GMT)

நல்லகண்ணு உடனான சந்திப்பு கட்சிக்கு அப்பாற்பட்டது என்று நடிகர் கமல் கூறியுள்ளார். #KamalHaasan

சென்னை,

சென்னை தி.நகரில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நடிகர் கமலஹாசன் சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் செய்தியார்களிடம் கூறியதாவது:

எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதால் நல்லகண்ணுவை சந்தித்து பேசினேன். நல்லகண்ணு உடனான சந்திப்பு கட்சிக்கு அப்பாற்பட்டது.  மக்களுக்கு யார் சேவை செய்தாலும் அவர்களை மதிப்பேன். நேர்மையாக வாழும் மனிதர்களுடனான சந்திப்பு எனக்கு பலம் சேர்க்கும் என நம்புகிறேன். 

கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன். மதுரையில் 21-ம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்புவிடுத்துள்ளேன்.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

கமல் சந்திப்பு குறித்து செய்தியார்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நல்லக்கண்ணு,

நடிகர் கமல் கட்சி துவங்க உள்ளதையொட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்று  கூறினார்.

Next Story