மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: 4 தூண்கள் சேதம் வல்லுநர் குழு உறுப்பினர் தகவல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: 4 தூண்கள் சேதம் வல்லுநர் குழு உறுப்பினர் தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2018 10:24 AM GMT (Updated: 18 Feb 2018 10:24 AM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள 4 தூண்கள் சேதமடைத்துள்ளதாக வல்லுநர் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். #MeenakshiAmmanTemple


மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், பெரிய கோபுரங்கள் ஆகியவை பல நூறு ஆண்டுகளை கடந்தும் அப்படியே கம்பீரமாக உள்ளன. 

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு, சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள கடைகள் எரிந்து நாசமாயின. 

தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு 2வது முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தியது. பின்னர் வல்லுநர் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் செய்தியார்களிடம் கூறியதாவது:

மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தில் 4 தூண்கள் சேதமடைத்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை பாதுாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சேதமடைந்த பகுதிகள் ஆவணபடுத்திய பிறகு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வீரவசந்தராயர் மண்டப சிலைகள், தூண்கள் சேதமடையாமல் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story