தூக்கு தண்டனை: மேல்முறையீடு செய்ய தஷ்வந்துக்கு கோர்ட்டு அனுமதி


தூக்கு தண்டனை: மேல்முறையீடு செய்ய தஷ்வந்துக்கு கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 19 Feb 2018 7:15 PM GMT (Updated: 19 Feb 2018 5:42 PM GMT)

தூக்கு தண்டனை விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய தஷ்வந்துக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. #Tamilnews #Daswant

காஞ்சீபுரம்

செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு கூறியதும், தண்டனையை குறைக்குமாறு நீதிபதியிடம் தஷ்வந்தின் வக்கீல் ராஜ்குமார் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். என்றாலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தஷ்வந்துக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
மேலும் தஷ்வந்துக்கு அபராதம் எதுவும் விதிக்கக்கூடாது என்றும் அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

Next Story