ஜெயலலிதா மரணம் : விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சமையல்காரர் ராஜம்மாள் ஆஜர்


ஜெயலலிதா மரணம் : விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா  சமையல்காரர் ராஜம்மாள் ஆஜர்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:39 AM GMT (Updated: 20 Feb 2018 10:39 AM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகியுள்ளார். #JayalalithaaDeath #InquiryCommission #TamilNews

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணைக் கமிஷன்  விசாரணை நடந்து  வருகிறது. முன்னாள் இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சமையல்காரராக பணிபுரிந்த  ராஜம்மாள் ஆஜரானார்.

Next Story