நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றார் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு


நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றார் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2018 3:56 PM GMT (Updated: 20 Feb 2018 3:56 PM GMT)

நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றார். #KamalHaasan

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்தனர். ஒரே சமயம் இருவரும் அரசியல் களத்தில் இறங்குவதால், இணைந்து செயல்படுவார்களா? அல்லது எதிரும், புதிருமாக மல்லுக்கட்டுவார்களா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆன்மிக அரசியலை ரஜினிகாந்தும், பகுத்தறிவு அரசியலை கமல்ஹாசனும் கையில் எடுத்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி நாளை (புதன்கிழமை) மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்து, கொடி மற்றும் கட்சியின் கொள்கை விவரங்களை அறிவிக்க உள்ளார். 

இந்தநிலையில்  நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.  ராமேஸ்வரம் சென்ற கமலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story