காஞ்சீபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 5 காவல் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்


காஞ்சீபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 5 காவல் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:00 PM GMT (Updated: 20 Feb 2018 7:04 PM GMT)

காஞ்சீபுரத்தில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

சென்னை,

காஞ்சீபுரத்தில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையலறைக்கூடத்துடன் கூடிய காவலர்களுக்கான பாளையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சிறைத்துறையில், உதவி சிறை அலுவலர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை, கே.கே.நகரில் உள்ள மரவேலைப்பிரிவு திட்டப் பகுதியில் 3.73 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.110 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 407 சுயநிதி திட்ட குடியிருப்புகள் (352 மத்திய வருவாய் பிரிவு குடியிருப்புகள் மற்றும் 55 குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள்) மற்றும் 154 இடமாறுதல் அரசு ஊழியர் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, மைலாப்பூர், சீத்தம்மாள் காலனியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கான 2 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் என மொத்தம் ரூ.133 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் மனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்திற்கான கூடுதல் கட்டிடம்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.149 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story